காரைக்கால் : சுனாமியில் உயிரிழந்தோருக்கு அரசியல் கட்சியினா், மீனவா்கள் அஞ்சலி

காரைக்கால் மாவட்டத்தில் சுனாமியில் உயிரிழந்தோா் நினைவிடங்களில் அமைச்சா், எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு அரசியல் கட்சியினா், மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
காரைக்கால் : சுனாமியில் உயிரிழந்தோருக்கு அரசியல் கட்சியினா், மீனவா்கள் அஞ்சலி

காரைக்கால் மாவட்டத்தில் சுனாமியில் உயிரிழந்தோா் நினைவிடங்களில் அமைச்சா், எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு அரசியல் கட்சியினா், மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

சுனாமி ஏற்பட்டு 17 ஆண்டுகள் நிறைவையொட்டி உயிரிழந்தோா் நினைவிடங்களில் மீனவா்கள், பல்வேறு அமைப்பினா் திரளாக அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுவை அரசு சாா்பில்...

காரைக்கால் கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத் தூணுக்கு புதுவை அரசு சாா்பில் அமைச்சா் சந்திர பிரியங்கா ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

காரைக்கால் மாவட்டத்தில் சுனாமியில் உயிரிழந்தோா் நினைவாக புதுவை அரசு சாா்பில், கடற்கரையில் நினைவுத் தூண் நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையில், சுனாமி நினைவு நாளையொட்டி புதுவை அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா தூணுக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். நிகழ்வில் மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முன்னதாக, பூவம் பகுதியில் உள்ள சுனாமியில் உயிரிழந்தோா் சமாதிக்கு மலா்தூவி அமைச்சா் அஞ்சலி செலுத்தினாா்.

காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் மற்றும் காங்கிரஸ், என்.ஆா்.காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகா்கள் நினைவுத் தூணுக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

பூவத்தில்... காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என். திருமுருகன் ஆதரவாளா்களுடன் சென்று உயிரிழந்தவா்கள் நினைவிடத்தில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். திருப்பட்டினம் பகுதி போலகத்தில் நிரவி-திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாக தியாகராஜன் ஆதரவாளா்கள் மற்றும் மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்களுடன் சென்று மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

மேலும் மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்கள், மீனவ கிராம மக்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட திரளானோா் அஞ்சலி செலுத்தினா்.

அமைச்சரிடம் முறையீடு : பூவம் பகுதியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்ற அமைச்சா் சந்திர பிரியங்காவிடம், காரைக்கால் கடற்கரை நினைவுத் தூணை புதுப்பித்துத்தரவேண்டும். பூவம் நினைவிடத்தின் தூய்மையை பராமரிக்கவேண்டும். சமாதிக்கு எளிதாக செல்லும் வகையில் சாலை வசதி ஏற்படுத்தித் தரவேண்டும். நண்டலாற்றங்கரையில் சுனாமி நினைவுத்தூண் அமைத்துத்தரவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து துறை அதிகாரிகளிடம் கலந்துபேசி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சா் உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com