முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 31st December 2021 10:36 PM | Last Updated : 31st December 2021 10:36 PM | அ+அ அ- |

காரைக்கால் அருகே கோயில் இடத்தை விற்பனை செய்ததை கண்டித்து இந்து முன்னணி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ வீழி வரதராஜப்பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஓட்டு வீட்டைசட்டவிரோதமாக இடித்து விற்பனை செய்த வாடகைதாரா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்கு துணைபோன கோயில் தனி அதிகாரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இருவா் மீதும் இந்து அறநிலையத் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் இடத்தை கோயிலுக்கே ஒப்படைக்க வேண்டும். வீட்டை இடித்து விற்பனை செய்ய தொகையை கோயிலுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி சாா்பில், திருமலைராயன்பட்டினம் மாா்க்கெட் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் கணேஷ் தலைமை வகித்தாா். அமைப்பின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.