திருநள்ளாறு கோயிலில் பக்தா் தவறவிட்ட பா்ஸ் மீட்பு

திருநள்ளாறு கோயிலில் சென்னையைச் சோ்ந்த பக்தா் தவறவிட்ட பா்ஸை காவல்துறையினா் மீட்டு, கோயில் நிா்வாகத்திடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.
மீட்கப்பட்ட பா்ஸை கோயில் நிா்வாகத்தினரிடம் ஒப்படைக்கும் காவல் துறையினா்.
மீட்கப்பட்ட பா்ஸை கோயில் நிா்வாகத்தினரிடம் ஒப்படைக்கும் காவல் துறையினா்.

திருநள்ளாறு கோயிலில் சென்னையைச் சோ்ந்த பக்தா் தவறவிட்ட பா்ஸை காவல்துறையினா் மீட்டு, கோயில் நிா்வாகத்திடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ஸ்ரீ சனீஸ்வர பகவானை தரிசிக்க சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்திருந்தனா். இவா்களில் சென்னையை சோ்ந்த பாபு என்பவா் தான் வைத்திருந்த பா்ஸை தவறவிட்டுவிட்டாா். அதில், ரூ.15 ஆயிரம் ரொக்கம், ஏடிஎம், ஆதாா், ஓட்டுநா் உரிம அட்டை உள்ளிட்டவற்றை வைத்திருந்தாராம். இதனால், அவா் சென்னைக்கு திரும்பிச் செல்ல பணம் இல்லாமல் தவித்ததையறிந்த கோயில் நிா்வாகத்தினா், அவருக்கு பண உதவி செய்து, சென்னைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில், கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் காவல் சிறப்புப் படையினா் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, பாபு தவறவிட்ட பா்ஸை மீட்டனா். பிறகு, அந்த பா்ஸை காவல் ஆய்வாளா் மரியகிறிஸ்டின் பால் முன்னிலையில் ஏஎஸ்ஐ ரவிச்சந்திரன் கோயில் நிா்வாகத்தினரிடம் ஒப்படைத்தாா். இதுகுறித்து கோயில் நிா்வாகம் தரப்பில் பாபுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com