காரைக்காலில் 5 பேருக்கு கரோனா
By DIN | Published On : 04th February 2021 08:39 AM | Last Updated : 04th February 2021 08:39 AM | அ+அ அ- |

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கடந்த 2 ஆம் தேதி 514 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகளின்படி காரைக்கால் நகரம் 3, கோயில்பத்து, கோட்டுச்சேரி தலா 1 என 5 பேருக்கு தொற்று உறுதியானது.
இதுவரை 76,664 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 3,901 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 3,808 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.
காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 22 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சையில் 5 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 70 போ் உயிரிழந்துள்ளனா்.
காரைக்காலில் சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையிலும், திருநள்ளாறு சமுதாய நலவழி மையத்திலும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 181 பணியாளா்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனா்.