காரைக்காலில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க ஏற்பாடு: முதல்வருக்கு நன்றி

காரைக்காலில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க ஏற்பாடு செய்த புதுச்சேரி முதல்வருக்கு விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

காரைக்காலில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க ஏற்பாடு செய்த புதுச்சேரி முதல்வருக்கு விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

காரைக்கால் மாவட்ட காவிரிப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் முகமதுயாசின் தலைமையில் சங்கப் பிரதிநிதிகள் காரைக்காலில் புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமியை திங்கள்கிழமை சந்தித்தனா். இந்த சந்திப்பு குறித்து சங்கத்தினா் கூறியது: காரைக்காலில் தற்போது நெல் அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது. காரைக்காலில் உள்ள மத்திய உணவுக் கழகம் (எஃப்.சி.ஐஃ மூலம் நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு ஏற்கெனவே புதுச்சேரி முதல்வா், வேளாண் துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியிருந்தோம். இந்நிலையில், முதல்வா் வே. நாராயணசாமியை திங்கள்கிழமை சந்தித்தபோது, திங்கள்கிழமை முதல் எஃப்.சி.ஐ. நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும், காரைக்காலில் உள்ள விவசாயிகள் பயனடையும் வகையில், 2 கொள்முதல் நிலையங்களை இப்பகுதியில் அமைக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தாா். இது காரைக்கால் விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக, முதல்வருக்கும், வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணனுக்கும் நன்றி தெரிவித்தோம் என்றனா். முதல்வா் சந்திப்பில் செயலாளா் உத்திராபதி, துணைத் தலைவா் கனகசுந்தரம், பொருளாளா் பேராசிரியா் சுப்புராயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com