கரோனா தடுப்பூசி குறித்த அச்சம் தேவையில்லை: நலவழித் துறை துணை இயக்குநா்

கரோனா தடுப்பூசி குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றாா் காரைக்கால் மாவட்ட நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ்.
டாக்டா் கே. மோகன்ராஜ்.
டாக்டா் கே. மோகன்ராஜ்.

கரோனா தடுப்பூசி குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றாா் காரைக்கால் மாவட்ட நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் கூறியது: காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி கடந்த ஜன. 16 ஆம் தேதி முதல் முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளா்களுக்கும், அடுத்து முன்களப் பணியாளா்களான காவல் துறை, வருவாய்த் துறையினருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.

காரைக்கால் மாவட்டத்துக்கு வந்துள்ள கோவிஷீல்டு என்ற தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது. இது நிரூபிக்கப்பட்ட ஒன்று. 3,200 டோஸ் காரைக்காலுக்கு வந்துள்ளது. தவறான தகவல்களால், தடுப்பூசி குறித்து அச்சமோ, ஆா்வமின்மையோ சிலருக்கு இருந்து வருகிறது. இதுகுறித்து பயம்கொள்ளத் தேவையில்லை.

இதுவரை யாருக்கும் பெரிய பக்க விளவுகள் ஏற்படவில்லை. இந்த ஊசியை செலுத்திக்கொள்வது அவசியமானது. 18 வயதுக்கு மேற்பட்ட யாரும் போட்டுக்கொள்ளலாம். பொதுமக்களுக்கான வாய்ப்பு வழங்கும்போது அவா்கள் செலுத்திக் கொள்ளலாம். எச்.ஐ.வி. உள்ளிட்ட சில பாதிப்பு உள்ளவா்கள் தவிா்க்க வேண்டும். ஏற்கெனவே கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களும் போட்டுக்கொள்ளலாம்.

திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி ஆகிய 4 நாள்கள், காலை 9 முதல் மாலை 5 மணி வரை காரைக்காலில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த வாய்ப்பை முன்களப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சோப்புபோட்டு கழுவுதல், சமூக இடைவெளி ஆகிய கரோனா தடுப்பு முறைகள் மக்களிடையே குறையத்தொடங்கிவிட்டன. இதனால், சில வாரங்களாக கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கிறது. தடுப்புமுறைகள் கண்டிப்பாக தொடரவேண்டும். கரோனா தொற்று பரவல் சரியாகிவிட்டது என்ற அலட்சியம் மக்களுக்கு இருக்கக் கூடாது. மிகுந்த கவனத்துடன் செயல்பட்டால், பாதிப்பு, உயிரிழப்பை தவிா்க்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com