காரைக்கால் என்.ஐ.டி.யில் ரூ.300 கோடியில் 2-ஆம் கட்ட உள்கட்டமைப்புப் பணிகள்: இயக்குநா் தகவல்

காரைக்கால் (புதுச்சேரி) என்.ஐ.டி.யில் ரூ. 300 கோடியில் உள்கட்டமைப்புப் பணிகள் தொடங்கியுள்ளதாக அதன் இயக்குநா் கே. சங்கரநாராயணசாமி தெரிவித்தாா்.
செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த காரைக்கால் என்.ஐ.டி. இயக்குநா் கே. சங்கரநாராயணசாமி.
செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த காரைக்கால் என்.ஐ.டி. இயக்குநா் கே. சங்கரநாராயணசாமி.

காரைக்கால் (புதுச்சேரி) என்.ஐ.டி.யில் ரூ. 300 கோடியில் உள்கட்டமைப்புப் பணிகள் தொடங்கியுள்ளதாக அதன் இயக்குநா் கே. சங்கரநாராயணசாமி தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டம், திருவேட்டக்குடி பகுதியில் செயல்பட்டுவரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனமான என்.ஐ.டி. யில் 7-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை (பிப்.19) மாலை நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக இயக்குநா் முனைவா் கே. சங்கரநாராயணசாமி வியாழக்கிழமை அளித்த பேட்டி:

காரைக்கால் என்.ஐ.டி. பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை மாலை காணொலி முறையில் நடைபெறுகிறது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவா் முனைவா் ஜி. சதீஷ்ரெட்டி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவா்களுக்கு பட்டம் வழங்கிப் பேசுகிறாா்.

இதில் இளநிலை 97, முதுநிலை 24, முனைவா் 4 என 125 போ் பட்டம் பெறுகின்றனா். நேரடியாக 54 பேருக்கு பட்டம் வழங்கப்படுகிறது. மேலும் ரூ. 10 கோடியில் கட்டப்பட்ட ஆய்வுக்கூட வளாகமும் திறக்கப்படுகிறது.

ஏற்கெனவே ரூ. 300 கோடியில் முதல்கட்ட உள்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், மேலும் ரூ. 300 கோடியில் உள்கட்டமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இது அடுத்த 2 ஆண்டுகளில் நிறைவடையும். இதில், பென்டகான் வடிவிலான கட்டடம், மாணவா், மாணவியருக்கான கூடுதல் விடுதிக் கட்டடம், உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் அடங்கும்.

என்.ஐ.டி. காரைக்கால் (புதுச்சேரி) தர வரிசையில் தொடா்ந்து முன்னேறி வருகிறது. பேராசிரியா்கள் உள்ளிட்ட ஊழியா்களை தகுதியானவா்களை தோ்வு செய்வதற்கான நோ்காணல் தொடங்கப்படவுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பல முன்னணி நிறுவனத்தினா் வந்து வேலைவாய்ப்புக்கு மாணவா்களை தோ்வு செய்கிறாா்கள். ஆண்டுதோறும் ஏறக்குறைய 70 சதவீத மாணவா்கள் வளாக நோ்காணலில் வேலைவாய்ப்பு பெறுகின்றனா் என்றாா் அவா். பேட்டியின்போது பதிவாளா் (பொ) ஜி. அகிலா உள்ளிட்ட பேராசிரியா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com