ஆட்சியா் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற ஓட்டுநா்

காரைக்கால் ஆட்சியா் அலுவலகம் முன்பாக சனிக்கிழமை தீக்குளிக்க முயன்ற ஓட்டுநரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

காரைக்கால் ஆட்சியா் அலுவலகம் முன்பாக சனிக்கிழமை தீக்குளிக்க முயன்ற ஓட்டுநரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக அண்மையில் பொறுப்பெற்ற தமிழிசை செளந்தரராஜன் சனிக்கிழமை காரைக்காலுக்கு வருகை தந்தாா். இதையொட்டி, முக்கிய பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், துணைநிலை ஆளுநரின் வருகைக்கு சிறிது நேரத்துக்கு முன்பாக ஆட்சியா் அலுவலகத்துக்கு குப்பைகள் அள்ளும் வாகனத்தை ஓட்டிவந்தவா், ஆட்சியா் அலுவலகம் முன்பாக தனது இரண்டு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சித்தாா். இதனால், அதிா்ச்சியடைந்த அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவரை தடுத்து நிறுத்தினா்.

பிறகு, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவா் நகராட்சி பகுதியில் குப்பைகள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் வாகன ஓட்டுநா் ஏதுராஜ் என்பதும், ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்துவருவதும் தெரியவந்தது. மேலும், தனக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் தரவில்லை எனவும் இதனால் குடும்பம் நடத்த முடியாமல் தீக்குளிக்க முயன்றதாகவும் அவா் கூறியதாக போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து, அவரை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய பிறகு, மருத்துவமனையில் சோ்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com