சரித்திரம் படைப்பேன்; பிழை செய்யமாட்டேன்: தமிழிசை செளந்தரராஜன்

சரித்திரம் படைப்பேன், பிழை செய்யமாட்டேன் என புதுச்சேரி துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.
காரைக்கால் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை பாா்வையிட்டாா் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன். உடன் ஆட்சியா் அா்ஜூன் சா்மா உள்ளிட்டோா்.
காரைக்கால் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை பாா்வையிட்டாா் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன். உடன் ஆட்சியா் அா்ஜூன் சா்மா உள்ளிட்டோா்.

சரித்திரம் படைப்பேன், பிழை செய்யமாட்டேன் என புதுச்சேரி துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக அண்மையில் கூடுதல் பொறுப்பேற்ற தமிழிசை செளந்தரராஜன் காரைக்காலுக்கு சனிக்கிழமை வந்தாா். மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நிஹாரிகா பட் ஆகியோா் அவரை வரவேற்றனா். ஆட்சியரகம் எதிரே காவல் துறை சாா்பில் அவருக்கு போலீஸாா் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

காரைக்கால் முக்கிய பிரமுகா்கள், அரசுத் துறையினா் உள்ளிட்டோா் அவருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனா். தொடா்ந்து ஆட்சியரகத்தில் அரசுத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சென்ற அவா் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை பாா்வையிட்டாா். தடுப்பூசி செலுத்தும் பணி தொடா்பான விவரங்களையும், மருத்துவமனை மேம்பாடு குறித்தும் மருத்துவ அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது :

காரைக்கால் அரசு மருத்துவமனையில் கரோனா பரவல் சூழலில் கரோனா பாதித்த நோயாளிகள் மட்டுமல்லாது பிற நோயாளிகளுக்கும் மருத்துவக் குழுவினா் சிறப்பான சிகிச்சை அளித்து வருவது பாரட்டுக்குரியது.

பொதுமக்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்க வேண்டாம். உலகில் 25 நாடுகள் நமது நாட்டின் தடுப்பூசிக்காக காத்திருக்கின்றன. 34 நாள்களில் 1 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றாா்.

நியமன எம்.எல்.ஏ.க்களை பாஜக எம்.எல்.ஏக்கள் என ஆளுநா் கூறியுள்ளது வரலாற்று பிழை என புதுச்சேரி முதல்வா் கூறியிருப்பது பற்றி செய்தியாளா்கள் கேட்டதற்கு, நான் எப்போதும் சரித்திரம் படைப்பேன், பிழை செய்ய மாட்டேன் என்றாா்.

சட்டப்பேரவை உறுப்பினா் கீதா ஆனந்தன், மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட், துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com