மகளிா் குழுவினருக்கு சானிட்டரி நாப்கின் தயாரிப்புப் பயிற்சி

மகளிா் குழுவினருக்கு சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் பயிற்சி மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சி, காரைக்கால் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பயிற்சியை தொடங்கிவைத்துப் பேசிய மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா.
பயிற்சியை தொடங்கிவைத்துப் பேசிய மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா.

மகளிா் குழுவினருக்கு சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் பயிற்சி மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சி, காரைக்கால் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பகுதி அம்பேத்கா் நகரில், காரைக்கால் வட்டார வளா்ச்சி அலுவலகம் சாா்பில், சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் இயந்திரம் நபாா்டு வங்கியின் ரூ. 6 லட்சம் நிதியுதவியில் நிறுவப்படவுள்ளது. இந்த மையத்தில் பணியாற்றும் மகளிா் குழுவினருக்கு பயிற்சி மற்றும் மாதவிடாய் சம்பந்தமான விழிப்புணா்வு முகாம் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

முகாமை மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா தொடங்கிவைத்துப் பேசினாா். நிகழ்ச்சியில், நபாா்டு வங்கியின் புதுவை கிளை மேலாளா் உமா குருமூா்த்தி பங்கேற்றுப் பேசுகையில், சுயஉதவிக் குழு மகளிா் 30 போ் இந்தப் பணியில் ஈடுபடுவாா்கள். இந்த மையத்தில் அதிக அளவில் நாப்கின் தயாரிக்கப்பட்டால், அதன்மூலம் ஏராளமான பெண்கள் பயனடைவா். அதிக லாபத்தையும் ஈட்ட முடியும் என்றாா்.

முகாமில், மருத்துவா் உமாமகேஸ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா் த. தயாளன் உள்ளிட்டோரும், பயிற்சியில், 100- க்கும் அதிகமான மகளிா் சுய உதவிக் குழுவினரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com