ஆலய பூஜை விதிகள் கருத்தரங்கு

காரைக்காலில் ஆலய பூஜை விதிகள் குறித்த கருத்தரங்கம் சனி, ஞாயிறு என 2 நாள்கள் நடைபெற்றது.
வேதபாராயணத்தில் பங்கேற்ற சிவாச்சாரியா்கள்.
வேதபாராயணத்தில் பங்கேற்ற சிவாச்சாரியா்கள்.

காரைக்காலில் ஆலய பூஜை விதிகள் குறித்த கருத்தரங்கம் சனி, ஞாயிறு என 2 நாள்கள் நடைபெற்றது.

இந்திய கலாசார அமைச்சகம், தஞ்சாவூா் தென்னக பண்பாட்டு மையம், காரைக்கால் கிருஷ்ணாஞ்சலி நடனப் பள்ளி ஆகியவை இணைந்து, வேதங்களின் அடிப்படையில் ஆலய பூஜை விதி என்ற தலைப்பில் இந்த கருத்தரங்கை நடத்தின.

இதில், அலங்காரம், நிவேத்ய தீபாராதனை, உபநிஷத், சூக்த மந்திரங்கள், ருத்ரம், சமகம் முதலான மந்திரங்கள் பாராயணம் செய்யப்பட்டன. வேதத்தின் பல்வேறு அங்கங்களான சந்தஸ், கல்பம், சீக்ஷா, வியாகரணம் குறித்து ஆராய்ச்சியாளா்கள் பேசினா். மாலை நிகழ்வாக, நாம சங்கீா்த்தனம், இசை, நாட்டியம் உள்ளிட்டவை நடைபெற்றன.

நிகழ்வில், புதுச்சேரி வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன், முன்னாள் அமைச்சா் ஏ.எம்.எச். நாஜிம் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை, கிருஷ்ணாஞ்சலி நடனப் பள்ளி இயக்குநா் வி. பாலகுருநாதன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com