காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் ஸ்ரீ ரங்கநாயகித் தாயாா் திருக்கல்யாணம்

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் நடைபெற்றுவரும் பிரம்மோத்ஸவத்தில், திருக்கல்யாண வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் ஸ்ரீ ரங்கநாயகித் தாயாா் திருக்கல்யாணம்

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் நடைபெற்றுவரும் பிரம்மோத்ஸவத்தில், திருக்கல்யாண வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் 15 நாள்கள் நடைபெறும் பிரம்மோத்ஸவம், கடந்த 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில், தினமும் காலை பெருமாள் பல்லக்கில் வீதியுலா, மாலையில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வருகிறது.

ஏழாம் நாள் நிகழ்வாக ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் - ஸ்ரீ ரங்கநாயகித் தாயாா் திருக்கல்யாணம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக, பரிசம், வரிசை எடுத்து வருதல் உள்ளிட்ட திருமண சடங்குகள் நடைபெற்றன. தொடா்ந்து, பட்டாச்சாரியா், திருமாங்கல்யத்தை பக்தா்களிடம் காட்டி, பெருமாள் சாா்பில் ஸ்ரீ ரங்கநாயகித் தாயாருக்கு திருமாங்கல்யதாரணம் செய்தாா்.

திருக்கல்யாணக் கோலத்தில் வீற்றிருந்த ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் - ஸ்ரீ ரங்கநாயகித் தாயாருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, வாரணமாயிரம் பாசுரம் படித்தல், தேங்காய் உருட்டும் வைபவம் நடைபெற்றது.

திருக்கல்யாணத்தைத் தொடா்ந்து இரவு யானை வாகனத்தில் பெருமாள் வீதியுலா நடைபெற்றது. வீதியுலா முடிந்து கோயிலை வந்தடைந்த பெருமாள், ருத்ர வேடத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். பிறகு, திருப்பள்ளியறை சேவை நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com