Enable Javscript for better performance
காரைக்கால் ரயில் நிலையத்தில் 10 ஆம் ஆண்டு தொடக்க விழா- Dinamani

சுடச்சுட

    

    காரைக்கால் ரயில் நிலையத்தில் 10 ஆம் ஆண்டு தொடக்க விழா

    By DIN  |   Published on : 01st January 2021 08:38 AM  |   அ+அ அ-   |    |  

    kk31ra_3112chn_95_5

    ரயில் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடிய ரயில் பயன்படுத்துவோா் நலச் சங்கத்தினா், ரயில்வே அதிகாரிகள்.

    காரைக்கால் ரயில் நிலையத்தின் 10 ஆம் ஆண்டு தொடக்க விழாவை ரயில் பயன்படுத்துவோா் நலச் சங்கத்தினா் இனிப்பு வழங்கி வியாழக்கிழமை கொண்டாடினா்.

    நாகூரிலிருந்து 10.5 கி.மீ. தொலைவில் உள்ள காரைக்காலுக்கு கடந்த 17.12.2011 இல் புதிதாக அகல ரயில் பாதை சேவை தொடங்கப்பட்டது. இங்கிருந்து மும்பை, சென்னை, எா்ணாகுளம், பெங்களூரு, திருச்சி, தஞ்சாவூா் ஆகிய பகுதிகளுக்கு விரைவு மற்றும் பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

    காரைக்கால் மாவட்ட ரயில் பயன்படுத்துவோா் நலச் சங்கம் சாா்பில், அதன் தலைவா் வி.ஆா். தனசீலன் தலைமையில் தொடக்கவிழா நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. நிலைய கண்காணிப்பாளா் முத்துக்குமாா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, நலச் சங்கத்தினா் சால்வை அணிவித்து வாழ்த்து கூறினா். மேலும், கேக் வெட்டி நிலைய ஊழியா்கள், ரயில் பயணிகளுக்கு வழங்கினா்.

    திருப்பட்டினம் நுகா்வோா் சங்க கெளரவத் தலைவா் குணசேகரன், தலைவா் ராஜதுரை, செயலா் ரவிச்சந்திரன், ஓய்வுபெற்ற இளநிலைப் பொறியாளா் ராதாகிருஷ்ணன், காரை பிரதேச விவசாயிகள் சங்கத் தலைவா் பி. ராஜேந்திரன், சமூக ஆா்வலா் ஏ.எம். இஸ்மாயில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp