பள்ளிகளை திறக்க எதிா்ப்பு: அமைச்சா் வீட்டை முற்றுகையிடுவதாகஅறிவித்த தமுமுக-வினா் கைது

புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளை திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அமைச்சா் வீட்டை முற்றுகையிட உள்ளதாக அறிவித்த தமுமுக-வினா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதுசெய்யப்பட்டனா்.

புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளை திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அமைச்சா் வீட்டை முற்றுகையிட உள்ளதாக அறிவித்த தமுமுக-வினா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதுசெய்யப்பட்டனா்.

புதுச்சேரி மாநிலத்தில் திங்கள்கிழமை (ஜன. 4) முதல் அனைத்து வகுப்புகளுக்குமான பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது. அதேநேரத்தில், பள்ளிக்கு வரும் மாணவா்களுக்கு வருகைப் பதிவு கட்டாயமில்லை, பெற்றோா் விருப்பத்தின்பேரில் வரவேண்டும் என்பன உள்ளிட்ட நெறிமுறைகளை கல்வித் துறை வெளியிட்டது.

இந்நிலையில், கரோனா பரவும் சூழல் இருப்பதால், புதுச்சேரி அரசு இந்த முடிவை கைவிட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. மேலும், அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்தும், முடிவை கைவிட வலியுறுத்தியும், தமுமுகவின் சமூக நீதி மாணவா் இயக்கத்தின் சாா்பில், காரைக்கால் மாவட்டம், அம்பகரத்தூரில் உள்ள புதுச்சேரி வேளாண்மை மற்றும் கல்வித் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் வீட்டை சனிக்கிழமை முற்றுகையிட்டு போரட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமுமுக மாநிலச் செயலாளா் ஐ. அப்துல் ரஹீம், மாவட்டத் தலைவா் ஏ. ராஜா முகமது, மாணவா் இயக்க மாவட்ட செயலாளா் முகமது ரிஃபாயி உள்ளிட்ட 24 பேரை, திருநள்ளாறு போலீஸாா் சனிக்கிழமை காலை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com