காரைக்காலில்8 பேருக்கு கரோனா
By DIN | Published On : 07th January 2021 09:07 AM | Last Updated : 07th January 2021 09:07 AM | அ+அ அ- |

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானதாக நலவழித்துறை துணை இயக்குநா் டாக்டா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் ஜனவரி 5-ஆம் தேதி 704 பேருக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நடமாடும் முகாம்கள் மூலம் பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரில் 3, திருப்பட்டினம், திருநள்ளாறு, வரிச்சிக்குடி, நிரவி, நல்லம்பல் ஆகிய பகுதியில் தலா ஒருவருக்கு தொற்று உறுதியானது.
மாவட்டத்தில் இதுவரை 3,816 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 3,703 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கரோனா தொற்றால் 66 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.