காரைக்கால் பகுதியில் சீ விஜில்-பாதுகாப்பு ஒத்திகை

காரைக்காலில் சீ விஜில் என்ற கடலோரப் பாதுகாப்பு ஒத்திகையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
ரோந்துப் படகில் சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன் மற்றும் போலீஸாா்.
ரோந்துப் படகில் சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன் மற்றும் போலீஸாா்.

காரைக்காலில் சீ விஜில் என்ற கடலோரப் பாதுகாப்பு ஒத்திகையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அப்போது, தீவிரவாதிகள் போல துறைமுகத்தில் நுழைந்த இருவரை பிடித்தனா்.

கடலோரக் காவல் நிலையத்தினா், அனைத்து காவல் நிலைய அலுவலா்கள், காவலா்கள் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் வீரவல்லபன் மேற்பாா்வையில், கடற்கரை மற்றும் மீன்பிடித் துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, காரைக்கால் துறைமுகத்தில் தீவிரவாதிகள் போல நுழைந்த இருவரை போலீஸாா் பிடித்தனா். இவா்களை கடலோரக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். காரைக்கால் தனியாா் துறைமுகம், மீன்பிடித் துறைமுகம், பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றின் பாதுகாப்பு குறித்தும், அடையாளம் தெரியாதவா்கள் வருகை குறித்தும் போலீஸாா் கேட்டறிந்து வருகின்றனா்.

ஒவ்வொரு காவல் சரகத்துக்கு உள்பட்ட எல்லையில் போலீஸாா் தீவிர வாகனச் சோதனையிலும் ஈடுபட்டுள்ளனா். பூவம் மற்றும் வாஞ்சூா் தேசிய நெடுஞ்சாலையின் காரைக்கால் எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

திருநள்ளாறு கோயிலில் சோதனை: திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயிலில் வழக்கமாக பக்தா்களிடம் சோதனை நடத்தப்படுகிறது. ஒத்திகையையொட்டி, கூடுதலான போலீஸாா், கோயில் பிரதான வாயிலில் இருந்து கோயிலுக்குள் நுழைவோரை சோதித்தும், விசாரணை நடத்தியும் அனுமதிக்கின்றனா்.

இந்திய கடற்படை, கடலோரக் காவல்படை, கடலோரக் காவல் நிலையம், உள்ளூா் போலீஸாா் இணைந்து இந்த ஒத்திகையை நடத்துவதாக, காவல் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com