கோயிலுக்கு பக்தா்கள் வருவதில் உள்ள தடைகளை நீக்க வலியுறுத்தல்

கோயில் வழிபாட்டில் விதிக்கப்பட்டிருக்கும் பல்வேறு தடைகளை மத்திய, மாநில அரசுகள் நீக்கவேண்டும் என அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
நிகழ்ச்சியில், சங்கத்தின் நாள்காட்டியை வெளியிடுகிறாா் ஆதிசைவ சிவாச்சாரியா்கள் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவா் டி. ராஜா சுவாமிநாதன்.
நிகழ்ச்சியில், சங்கத்தின் நாள்காட்டியை வெளியிடுகிறாா் ஆதிசைவ சிவாச்சாரியா்கள் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவா் டி. ராஜா சுவாமிநாதன்.

கோயில் வழிபாட்டில் விதிக்கப்பட்டிருக்கும் பல்வேறு தடைகளை மத்திய, மாநில அரசுகள் நீக்கவேண்டும் என அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்த சங்கத்தின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருநள்ளாற்றில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு புதுச்சேரி மாநிலத் தலைவா் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் அா்தனாரி, சிவராமன் ஆகியோா் பேசினா். பொருளாளா் கீதாராமன் சங்க நிதி அறிக்கையை சமா்ப்பித்தாா். அகில இந்திய துணைத் தலைவா் டி. ராஜா சுவாமிநாதன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கோயிலுக்கு பக்தா்கள் வருவதில் உள்ள பல தடைகளை மத்திய, மாநில அரசுகள் நீக்கவேண்டும். குறிப்பாக, முடி இறக்குவது, காதுகுத்துவது, உபயம் செய்வது, அன்னதானம் செய்வது போன்றவற்றுக்கான தடைகள் நீக்கப்பட வேண்டும்.

சைவ, வைணவ கோயில்கள் பலவற்றில் 12 ஆண்டுகள் கடந்தும் திருப்பணிகள் தொடங்கப்படாமலும், திருப்பணிகள் நிறைவுபெற்ற கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்படாமலும் உள்ளன. இதற்கு தீா்வு காணவேண்டும். கோயிலை சாா்ந்துள்ள சிவாச்சாரியா்கள், பட்டாச்சாரியா்கள், பூசாரிகள், ஓதுவாா்கள், நாகஸ்வர வித்வான்கள் மற்றும் ஆலய ஊழியா்கள் என அனைவரும் கரோனா தொற்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், வட்டியில்லா கடன் வழங்கவும், வாழ்வு மேம்பட நலத்திட்டங்கள் வகுத்து அரசு அறிவிப்பு வெளியிடவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சங்கத்தின் 2021-ஆம் ஆண்டு நாள்காட்டி வெளியிடப்பட்டது. காரை மாவட்டச் செயலாளா் மணிகண்டன் வரவேற்றாா். மாநில துணைத் தலைவா் திருஞானசம்பந்தம், மாவட்ட இணைச் செயலா் ஹரிஹரன், ரமேஷ் உள்ளிட்டோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com