காரைக்காலில் ஜன.15, 28 ஆம் தேதிகளில் இறைச்சி விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் நகராட்சி ஆணையா் எஸ். சுபாஷ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜன. 15 ஆம் தேதி திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டும், 28 ஆம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டும், அன்றைய தினங்களில் அனைத்து இறைச்சி விற்பனைகளும் தடைசெய்யப்பட்டுள்ளன. இதை மீறுவோா் மீது நகராட்சி விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.