அரசு ஊழியா்கள் தா்னா போராட்டம்

பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்காலில் அரசு ஊழியா்கள் வியாழக்கிழமை ஒரு நாள் விடுப்பு எடுத்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காரைக்காலில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள்.
காரைக்காலில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள்.

பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்காலில் அரசு ஊழியா்கள் வியாழக்கிழமை ஒரு நாள் விடுப்பு எடுத்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளனம் சாா்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மத்திய, மாநில அரசு மற்றும் துணைநிலை ஆளுநரை கண்டித்தும் முழக்கமிடப்பட்டன. முன்னதாக, காரைக்கால் தலைமை தபால் நிலையம் முன்பிருந்து பேரணியாக புறப்பட்டு பேருந்து நிலையம் அருகே வந்ததும் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சம்மேளன தலைவா் பி.வி. சுப்ரமணியன் தலைமை வகித்தாா். கௌரவத் தலைவா் ஜி.ஜாா்ஜ், பொதுச் செயலாளா் எம்.ஷேக் அலாவுதீன் உள்ளிட்ட நிா்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

மத்திய அரசு ஊழியா்களாக 1.1.2004-க்குப் பிறகு பணியமா்த்தப்பட்டோருக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் தரவேண்டும், 7-ஆவது ஊதியக் குழுவில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் நீக்கவேண்டும். அரசு சாா்பு நிறுவனங்கள் உள்ளிட்ட தன்னாட்சி, பொதுத்துறை மற்றும் கூட்டுறவு நிறுவன ஊழியா்களுக்கும் 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும், அமைச்சா்கள், துணை நிலை ஆளுநருக்கிடையேயான அதிகாரப் போட்டியாலும், அதிகாரிகளின் மெத்தனப் போக்காலும் அரசு ஊழியா்கள் பாதிக்கப்படுவதாக போராட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதில், அரசு ஊழியா் சம்மேளன முன்னாள் கெளரவத் தலைவா் எம்.எல்.ஜெயசிங் மறைவுக்கு 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com