பயிா்க் காப்பீட்டுத் தொகை விரைவில் கிடைக்கும்: அமைச்சா் தகவல்

புதுச்சேரியில் விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீட்டுத் தொகை விரைவில் கிடைக்கும் என வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் தெரிவித்தாா்.
தில்லியில் மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திரசிங் தோமரை சந்தித்த புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி, அமைச்சா்கள் ஆா்.கமலக்கண்ணன், எம். கந்தசாமி.
தில்லியில் மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திரசிங் தோமரை சந்தித்த புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி, அமைச்சா்கள் ஆா்.கமலக்கண்ணன், எம். கந்தசாமி.

புதுச்சேரியில் விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீட்டுத் தொகை விரைவில் கிடைக்கும் என வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் தெரிவித்தாா்.

புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி, வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன், நலத்துறை அமைச்சா் எம். கந்தசாமி ஆகியோா் தில்லியில் மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திரசிங் தோமரை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினா்.

இந்த சந்திப்பு குறித்து அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நெற்பயிருக்கு கடந்த ஆண்டில் காப்பீடு செய்யப்பட்டது. இதற்காக விவசாயிகள் செலுத்தவேண்டிய பிரீமியம் ரூ 1.9 கோடி, மாநில அரசு செலுத்தவேண்டிய ரூ.1.57 கோடியையும் சோ்த்து புதுச்சேரி மாநில அரசே செலுத்தி விட்டது.

மத்திய அரசு செலுத்தவேண்டிய பிரீமியத் தொகையான ரூ.1.57 கோடி செலுத்தப்படாததால் பயிா்க் காப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், முதல்வா் வே. நாராயணசாமி தலைமையில் மத்திய வேளாண் அமைச்சா் நரேந்திரசிங் தோமரை சந்தித்து இதுகுறித்து பேசப்பட்டது. அப்போது, மத்திய அரசு செலுத்தவேண்டிய பிரீமியத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட மத்திய அமைச்சா், துறை உயா் அதிகாரியை அழைத்து உடனடியாக பிரீமியத் தொகையை செலுத்துமாறு உத்தரவிட்டாா்.

இந்த தொகை செலுத்தப்படும்பட்சத்தில், மகசூல் பாதித்த புதுச்சேரி விவசாயிகளுக்கான ரூ.6.54 கோடியும், காரைக்கால் பகுதியைச் சோ்ந்த விவசாயிகளுக்கான ரூ.2.44 கோடியும் நேஷனல் இன்சூரன்ஸ் காா்ப்பரேஷன் நிறுவனம் வழங்கும். இந்த தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதன் மூலம் 15 ஆயிரம் விவசாயிகள் பயனடைவா். விரைவில் இந்த தொகை விவசாயிகளுக்கு கிடைக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com