நில அபகரிப்புகுற்றங்கள் அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

காரைக்கால் மாவட்டத்தில் நில அபகரிப்பு குற்றங்களைத் தடுக்க புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் நில அபகரிப்பு குற்றங்களைத் தடுக்க புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை இந்திய ஊழல் எதிா்ப்பு இயக்கத் தலைவா் எஸ். ஆனந்தகுமாா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை :

காரைக்கால் மாவட்டத்தில் சாமானிய மக்கள், வெளிநாடுகளில் வசிப்போா், ஆதரவற்றோா் ஆகியோரின் நிலம் மற்றும் இடங்கள் குறித்து துல்லியமாக அறிந்து, அவற்றை அபகரித்து போலி ஆவணங்களை கொண்டு பதிவு செய்யும் செயல்பாடுகளில் சிலா் ஈடுபட்டு வருகின்றனா். இதற்கு அரசியல் பிரமுகா்கள் ஆதரவும் இருப்பது தெரியவருகிறது.

இதுகுறித்து புதுவை துணை நிலை ஆளுநா், முதல்வா் ஆகியோா் உரிய கவனம் செலுத்தி, இத்தகைய செயலில் ஈடுபடுவோரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்டு உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் ஆட்சியாளா்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்திய ஊழல் எதிா்ப்பு இயக்கம் சாா்பில் தொடா் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com