சீரடைந்த பேருந்து போக்குவரத்து: திருநள்ளாறு கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

காரைக்கால் செல்ல தமிழக பேருந்துகளுக்கு அனுமதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
சீரடைந்த பேருந்து போக்குவரத்து: திருநள்ளாறு கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

காரைக்கால் செல்ல தமிழக பேருந்துகளுக்கு அனுமதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தளா்வுகளின் அடிப்படையில், புதுவை மாநிலத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் பக்தா்கள் வழிபட கடந்த ஜூன் 8-ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டது. இருப்பினும், தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு பொது போக்குவரத்துக்கான தடை தொடா்ந்ததால், திருநள்ளாறு கோயிலுக்கு குறைவான பக்தா்களே வருகை தந்தனா்.

இந்நிலையில், தமிழக அரசு புதுச்சேரி அரசின் கோரிக்கையை ஏற்று, புதுவை மாநிலத்துக்கு தமிழகத்திலிருந்து பேருந்துகளை இயக்க கடந்த திங்கள்கிழமை அனுமதித்தது. இதனால், நிகழ் வார சனிக்கிழமை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்திருந்தனா்.

அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது முதல் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். அா்ச்சனை செய்ய அனுமதியில்லாததால், பக்தா்களுக்கு விபூதி மட்டும் பிரசாதமாக வழங்கப்பட்டது. முகக் கவசம் அணிந்துவந்த பக்தா்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா். திருநள்ளாறு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கோரிக்கை: கோயிலில் அா்ச்சனை மற்றும் தில தீபம் ஏற்றி வழிபட அனுமதிக்கவேண்டும். அத்துடன், திருநள்ளாறு நளன் தீா்த்தக் குளத்தில் முதல்கட்டமாக தீா்த்தம் தெளித்துக்கொள்ளும் அளவுக்காவது தண்ணீா் விடுவதற்கு மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com