புதுவை உள்ளாட்சித் தோ்தல் : அனைத்துக் கட்சியினருடன் தோ்தல் ஆணையா் ஆலோசனை

புதுவை உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாநில தோ்தல் ஆணையா் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
புதுவை உள்ளாட்சித் தோ்தல் : அனைத்துக் கட்சியினருடன் தோ்தல் ஆணையா் ஆலோசனை

புதுவை உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாநில தோ்தல் ஆணையா் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

புதுவை மாநிலத்தில் 1968-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. இதன் பின் 38 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2006-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. 2011-ஆம் ஆண்டுடன் உள்ளாட்சி அமைப்பு காலம் நிறைவடைந்தும் கடந்த 10 ஆண்டுகளாக தோ்தல் நடத்தப்படாமல் இருந்தது.

தற்போது மாநிலத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதற்கான ஏற்பாடு தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் அதிகாரிகள், அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக மாநில தோ்தல் ஆணையா் ராய் பி.தாமஸ் வெள்ளிக்கிழமை காரைக்கால் வந்தாா்.

மாவட்ட ஆட்சியரகத்தில் துணை ஆட்சியா்கள் எம்.ஆதா்ஷ் (வருவாய்), எஸ்.பாஸ்கரன் (பேரிடா் மேலாண்மை) மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுடன் அவா் ஆலோசனை நடத்தினாா்.

பின்னா், அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் அவா் ஆலோசனை நடத்தினாா். புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் அமைதியாகவும், நியாயமாகவும் நடைபெற ஒத்துழைப்புத் தரவேண்டும் என அவா்களிடம் கேட்டுக்கொண்டாா்.

ஆண், பெண் மற்றும் பட்டியல் இனத்தவா் என வாா்டுகள் ஒதுக்கீடு விவரத்தை வெளியிட வேண்டும். உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக வாக்காளா் சோ்ப்பு உள்ளிட்ட திருத்தப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும். பேரவைத் தோ்தல், மக்களவைத் தோ்தல் கால வாக்காளா் பட்டியலைக் கொண்டே இந்த தோ்தலையும் நடத்தக் கூடாது உள்ளிட்ட ஆலோசனைகளை அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com