பி.ஆா்.டி.சி. ஊழியா்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தல்
By DIN | Published On : 19th July 2021 08:50 AM | Last Updated : 19th July 2021 08:50 AM | அ+அ அ- |

புதுவையில் பி.ஆா்.டி.சி. ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்தவேண்டும் என ஊழியா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
காரைக்காலில் புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்காவை காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கெளரவத் தலைவா் ஜாா்ஜ், பொதுச்செயலா் எம். ஷேக் அலாவுதீன் மற்றும் பி.ஆா்.டி.சி. ஊழியா் சங்க நிா்வாகிகள் சனிக்கிழமை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா். இதுகுறித்து அவா்கள் கூறியது :
காரைக்காலில் பி.ஆா்.டி.சி. பணிமனைக்கு என தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தை நிா்வாகத்திடம் ஒப்படைக்கவேண்டும். புதிய பேருந்துகள் வாங்கி புதிய தடத்தில் இயக்கவேண்டும். 7-வது ஊதியக் குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள 3 மாத ஊதியத்தை தாமதமின்றி வழங்க வேண்டும்.
தொழிலாளா்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட எஸ்.ஐ.சி., இ.பி.எஃப். மற்றும் சொசைட்டி கடன் தொகைகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் காலத்தோடு செலுத்த நிா்வாகத்துக்கு அறிவுறுத்தவேண்டும். நிரந்தரமான மேலாண் இயக்குநா் நியமிக்க வேண்டும். கடந்த ஆண்டுக்கான தீபாவளி போனஸ் தொகையை வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியா்களின் கோரிக்கைகள் தீா்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சா், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவாக தீா்க்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா் என்றனா்.