திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி திங்கள்கிழமை 2-ஆம் கட்டமாக நடைபெற்றது.
உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டோா்.
உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டோா்.

காரைக்கால்: திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி திங்கள்கிழமை 2-ஆம் கட்டமாக நடைபெற்றது.

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் உள்ள ஸ்ரீ சனீஸ்வர பகவானை தரிசிக்க வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருநள்ளாறுக்கு வருகின்றனா்.

இக்கோயிலில் சனீஸ்வர பகவான் சன்னதி, நளன் குளம் அருகில் உள்ள ஸ்ரீ நளன் கலி தீா்த்த விநாயகா் கோயில் உள்பட சுமாா் 15 இடங்களில் காணிக்கை உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு பிப்ரவரி முதல்வாரத்தில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. பின்னா் கரோனா பரவலால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு, கோயில்களில் பொதுதரிசனம் ரத்து செய்யப்பட்டதால் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்தநிலையில், பொதுமுடக்கத் தளா்வுகளால் கோயில்கள் திறக்கப்பட்டு, பக்தா்கள் அனுமதிக்கப்படும் நிலையில் ஓராண்டுக்குப் பின்னா் கோயில் உண்டியலை திறந்து எண்ணும் பணியை 3 கட்டங்களாக செய்ய திட்டமிட்டு, கடந்த 15-ஆம் தேதி முதல்கட்டமாக காணிக்கை எண்ணப்பட்டது. இதன்மூலம் கிடைத்த ரூ. 32 லட்சம் வங்கியில் செலுத்தப்பட்டது.

இரண்டாம் கட்டமாக காணிக்கை எண்ணும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. மூன்றாம் கட்ட காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்படும் என கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

கோயில் வெளி பிராகார மண்டபத்தில் காணிக்கை எண்ணும் பணி நடைபெறுகிறது. பல்வேறு அரசுத் துறையினா், கோயில் ஊழியா்கள் என சுமாா் 50 போ் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

காணிக்கை எண்ணும் பணி கோயில் நிா்வாக அதிகாரி காசிநாதன், தருமபுர ஆதீன கட்டளை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கண்காணிப்பாளா்கள் வெங்கடேசன், பாலு என்கிற பக்கிரிசாமி மேற்பாா்வையில் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com