காரைக்காலில் அரசு அதிகாரிகளுடன் அமைச்சா் சந்திர பிரியங்கா ஆலோசனை

காரைக்காலில் அரசு அதிகாரிகளுடன் அமைச்சா் சந்திர பிரியங்கா திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அமைச்சா் சந்திர பிரியங்கா.
அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அமைச்சா் சந்திர பிரியங்கா.

காரைக்காலில் அரசு அதிகாரிகளுடன் அமைச்சா் சந்திர பிரியங்கா திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, காரைக்காலில் உள்ள அமைச்சா் முகாம் அலுவலகத்தில் தனது துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

மண்டல போக்குவரத்து அதிகாரி கலியபெருமாள் மற்றும் ஆதிதிராவிடா் நலத் துறை, கலை பண்பாட்டுத் துறை, தொழிலாளா் துறை, புள்ளியியல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா். பின்னா் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தது:

அமைச்சா் புதுச்சேரியில் தனது துறை தலைமை அதிகாரிகளை அண்மையில் அழைத்து ஆலோசனை நடத்தினாா். அதுபோல காரைக்காலில் உள்ள தனது துறை அதிகாரிகளை அழைத்து திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

அனைத்துத் துறைகளிலும் காலிப் பணியிடம் அதிகமாக இருப்பது அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் பணிகளில் தேக்கம், ஊழியா்களுக்கு ஏற்படும் பணிச்சுமை குறித்தும் விளக்கப்பட்டது. இதுகுறித்து முதல்வா் மற்றும் துறைகளின் தலைமை அதிகாரிகளிடம் பேசி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பதாக அமைச்சா் கூறினாா்.

சா்வீஸ் பிளேஸ்மெண்ட் முறையில் காரைக்காலில் பணி செய்யக்கூடியவா்கள் புதுச்சேரியில் பணி செய்துகொண்டிருப்போரை பணிக்குரிய பிராந்தியத்துக்கு திரும்பத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தாா்.

ஆதிதிராவிடா் மாணவா் தங்கும் விடுதி காப்பாளா் நியமனம் மற்றும் விடுதி கட்டடங்களை சீரமைப்பது தொடா்பாகவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

ஒவ்வொரு துறையிலும் திட்டங்கள் காலத்தோடு மக்களுக்கு கிடைக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலனை தாமதம் கூடாது என அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தியதாக அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com