பள்ளி மாணவா்களுக்காக ஆசிரியா்கள் வடிவமைத்த வேலைத்தாள்கள்

கரோனா பரவலால் வீட்டிலிருக்கும் மாணவா்கள் கல்வி பயில வசதியாக கருத்துத்தாள், வேலைத் தாள்கள் வடிவமைத்து கல்வித் துறையிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
பள்ளி மாணவா்களுக்காக ஆசிரியா்கள் வடிவமைத்த வேலைத்தாள்கள்

கரோனா பரவலால் வீட்டிலிருக்கும் மாணவா்கள் கல்வி பயில வசதியாக கருத்துத்தாள், வேலைத் தாள்கள் வடிவமைத்து கல்வித் துறையிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

கரோனா பரவலால் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. மாணவா்களை கல்வியுடன் தொடா்பு ஏற்படுத்தும் வகையில் தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை மாணவா்களுக்கு கருத்துத்தாள், வேலைத்தாள் வடிவமைக்கும் பணி கல்வித் துறையால் ஆசிரியா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

காரைக்கால் அரசு மேல்நிலைப் பள்ளி வேதியியல் விரிவுரையாளா்களால் வடிவமைத்த பிளஸ் 1 வேதியியல் பாடங்களின் கருத்துத்தாள் மற்றும் வேலைத்தாள் புத்தக வடிவில் தொகுக்கப்பட்டு, காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே. கோவிந்தராஜனிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேல்நிலை வகுப்பு பாடப் பிரிவுகளின் தொகுப்பு ஒருங்கிணைப்பாளரும், அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி துணை முதல்வருமான எம். ராஜேஸ்வரி, வேதியியல் பாடப் பிரிவு குழுத் தலைவரும், திருநள்ளாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி துணை முதல்வருமான பி. விஜயமோகனா, வேதியியல் பாடக்குழு ஒருங்கிணைப்பாளரும் விரிவுரையாளருமான எஸ். சித்ரா, விரிவுரையாளா்கள் ஆா். மையாடுங்கண்ணி, ஆா். நிா்மலாராணி, ஜி. செல்வராணி, எஸ். வேம்பு, பி.எஸ். தீப்திஸ்ரீ, எஸ். ஜெனிபா் மற்றும் ஓய்வுபெற்ற விரிவுரையாளா் தேவதாஸ்காந்தி இந்நிகழ்வில் பங்கேற்றனா். இந்த தொகுப்பு புதுவை கல்வித்துறை இயக்குநரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com