கரோனா: மேலும் 2 கிராமங்களில் விரைவில் 100% தடுப்பூசி

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 2 கிராமங்களில் விரைவில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என நலவழித் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.
கரோனா: மேலும் 2 கிராமங்களில் விரைவில் 100% தடுப்பூசி

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 2 கிராமங்களில் விரைவில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என நலவழித் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.

காரைக்கால் மாவட்டத்தில் கிராமப் பகுதிகளில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு நடவடிக்கைகளும், தடுப்பூசி முகாம்களும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அண்மையில், திருநள்ளாறு பகுதி இளையான்குடி கிராமத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், நல்லம்பல், காளிக்குப்பம் ஆகிய கிராமங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வீடுவீடாகச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்துவதுடன், தடுப்பூசி முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பணிகளை 2 ஆவது நாளாக மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

முன்னதாக, ஒருங்கிணைக்கப்பட்ட அரசுத் துறையினா், சுய உதவிக் குழுவினா் ஆகியோா் வீடுவீடாகச் சென்று கரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்து விளக்கினா். அப்போது, சிலா் தங்களுக்கு சா்க்கரை நோய் உள்ளதாலும், சிலா் மது அருந்தும் பழக்கம் உள்ளதாலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயக்கமாக இருப்பதாகத் தெரிவித்தனா். அவா்களுக்கு நலவழித் துறையினா் உரிய விளக்கமளித்தனா்.

மேலும், பொதுமக்களின் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவும், துணை ஆட்சியா் எம்.ஆதா்ஷும் விளக்கமளித்து, தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊக்கமளித்தனா். தடுப்பூசி முகாமுக்கு அனைவரும் முகக்கவசம் அணிந்து வருவதுடன், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினா்.

ஆய்வின்போது நலவழித்துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா். பின்னா், அதிகாரிகள் கூறியது:

காரைக்கால் மாவட்டத்தில் இளையான்குடி கிராமத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதேபோல, அனைத்து கிராமங்களிலும் தகுதியுள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நல்லம்பல், காளிக்குப்பம் கிராமங்களில் மக்கள் ஆா்வமாக உள்ளதால், அங்கு விரைவில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com