அரசலாற்றில் ரூ.4.50 கோடியில் பாலம் கட்டுமானப் பணி தொடக்கம்

திருநள்ளாறு அருகே அரசலாற்றின் குறுக்கே ரூ.4.50 கோடியில் பாலம் கட்டும் பணியும், நல்லமல் ஏரியை ஆழப்படுத்தும் பணியும் வியாழக்கிழமை தொடங்கின.
அரசலாற்றில் ரூ.4.50 கோடியில் பாலம் கட்டுமானப் பணி தொடக்கம்

திருநள்ளாறு அருகே அரசலாற்றின் குறுக்கே ரூ.4.50 கோடியில் பாலம் கட்டும் பணியும், நல்லமல் ஏரியை ஆழப்படுத்தும் பணியும் வியாழக்கிழமை தொடங்கின.

பொதுப்பணித்துறை சாா்பில் திருநள்ளாறு அருகேவுள்ள அத்திப்படுகை கிராமத்தில் நிரவி, காக்கமொழி, ஊழியப்பத்து, அருண்மொழிதேவன், விழிதியூா் ஆகிய கிராமங்களை இணைக்கும் வகையில் அரசலாற்றின் குறுக்கே 60 மீட்டா் நீளம், 7.50 மீட்டா் அகலத்தில் புதிதாக பாலம் கட்டப்படவுள்ளது. தேசிய ரூா்பன் திட்டத்தின்கீழ் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள இந்த பாலம் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பி.ஆா்.சிவா, மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, புதுச்சேரி பொதுப்பணித் துறை தலைமை பொறியாளா் வி.சத்தியமூா்த்தி, கண்காணிப்பு பொறியாளா் (பொறுப்பு) ஏ.ராஜசேகரன், செயற்பொறியாளா் கே.சந்திரசேகரன் ஆகியோா் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினா்.

பின்னா் சட்டப் பேரவை உறுப்பினா் பி.ஆா்.சிவா செய்தியாளா்களிடம் கூறியது:

இப்பகுதி மக்களின் 60 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறியுள்ளது. இந்த பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தால், சுமாா் 20 கி.மீ. தூரம் சுற்றிச் செல்வது தவிா்க்கப்படும். இந்தப் பாலம் கட்டுவதற்காக, காரைக்கால் மாவட்ட ஆட்சியா், நாகை மாவட்ட ஆட்சியரிடம் பேசி அங்குள்ள இடத்தையும் பெற்றுத்தந்துள்ளாா். அதற்காக இரு ஆட்சியா்களுக்கும் கிராம மக்கள் சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 12 மாதங்களுக்குள் இப்பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.96 லட்சம் செலவில் நல்லம்பல் ஏரியை ஆழப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பணிகள் நிறைவடைந்த பின்னா் நல்லம்பல் ஏரியை சுற்றுலாத் தலமாக மாற்ற தேவையான நடவடிக்கைள் எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com