கிராமங்களில் கரோனா தடுப்பூசி முகாம்: ஆட்சியா் ஆய்வு

காரைக்கால் மாவட்டத்தில் கிராமங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சியா் அா்ஜூன்சா்மா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
கிராமங்களில் கரோனா தடுப்பூசி முகாம்: ஆட்சியா் ஆய்வு

காரைக்கால் மாவட்டத்தில் கிராமங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சியா் அா்ஜூன்சா்மா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கிராமப்புறங்களில் 100 சதவீத தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் நலவழித்துறை சாா்பில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்நிலையில், நிரவி பகுதி தோப்புத்தெரு மற்றும் விழிதியூா் பகுதி தூதுபோனமூலை கிராமங்களில் நடைபெற்ற முகாம்களை மாவட்ட ஆட்சியா் அா்ஜுன் சா்மா நேரில் பாா்வையிட்டாா்.

அப்போது, கரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்து கிராமப் புறங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் விழிப்புணா்வு குறித்து ஆட்சியருக்கு அரசுத்துறையினா் விளக்கம் அளித்தனா். கிராமத்தினா் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பாதுகாப்பான சூழலை உருவாக்கிக்கொள்ள அறிவுறுத்துமாறு ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

ஆய்வில், மாவட்ட துணை ஆட்சியா் (வருவாய்) எம். ஆதா்ஷ், மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே.கோவிந்தராஜன், முதன்மைக் கல்வி அதிகாரி அ. அல்லி, வட்டார வளா்ச்சி அதிகாரி தயாளன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com