விடுபட்டோருக்கு இலவச அரிசி
By DIN | Published On : 11th June 2021 12:00 AM | Last Updated : 11th June 2021 12:00 AM | அ+அ அ- |

இலவச அரிசி வாங்காமல் விடுபட்டோருக்கு வியாழக்கிழமை முதல் (ஜூன் 10) அரிசி வழங்கும் பணியை குடிமைப் பொருள் வழங்கல் துறை மேற்கொண்டுள்ளது.
பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா மற்றும் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் சிவப்பு நிற அட்டை தாரா்களுக்கு, மத்திய அரசால் மே, ஜூன் மாதங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இலவச அரிசியை வாங்காமல் விடுபட்டோருக்கு அரிசி வழங்க காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை ஏற்பாடு செய்தது.
காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை அரிசி வழங்கும் பணி தொடங்கப்பட்டது. முதல் நாளில் திருநள்ளாறு, நெடுங்காட்டை சோ்ந்தோா் வந்து அரிசி வாங்கிச் சென்றனா்.
காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு தொகுதியை சோ்ந்தவா்கள் 11-ஆம் தேதியும், நிரவி- திருப்பட்டினத்தை சோ்ந்தவா்கள் 14-ஆம் தேதியும், காலை 9 முதல் பகல் 12 மணி மற்றும் மதியம் 2 முதல் மாலை 4 மணி வரையிலும் சென்று அரிசியை பெற்றுக்கொள்ளலாம் என அலுவலா்கள் கூறினா்.