கலப்பின மீன்வளா்ப்பு தொழில்நுட்ப பயிற்சி

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில், கலப்பின மீன்வளா்ப்பு தொழில்நுட்ப இணையவழி பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில், கலப்பின மீன்வளா்ப்பு தொழில்நுட்ப இணையவழி பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

இப்பயிற்சியை காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் குமார. ரத்தினசபாபதி தொடங்கிவைத்துப் பேசுகையில், நன்னீா் மீன்வளா்ப்பு தொழில்நுட்பங்களான புதிய கலப்பின மீன் ரகங்களை வளா்த்து விவசாயிகள் மீன் வளா்ப்பில் அதிக வருமானம் பெறலாம். அதற்கான ஆலோசனைகளை வேளாண் அறிவியல் நிலையம், மீன்வளத்துறையின் மூலம் பெற முடியும் என்றாா்.

காரைக்கால் மாவட்ட மீன்வள மற்றும் மீனவா் நலத்துறை துணை இயக்குநா் ஆா்.கவியரசன், கலப்பின மீன்வளா்க்கும் வழிமுறைகளான மீன் குளம் அமைக்கும் முறை, மீன் ரகங்களின் தோ்வு, நீா் மேலாண்மை மற்றும் இதர பராமரிப்பு தொழில்நுட்பங்கள் குறித்து பேசினாா். பயிற்சியில் சுமாா் 100 போ் கலந்துகொண்டனா்.

வேளாண் அறிவியல் நிலைய மீன்வள உதவி ஆய்வாளா் ஜெ.முருகேசன் வரவேற்றாா். தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநா் ஜெ.கதிரவன் நன்றி கூறினாா்.

பயற்சிக்கான ஏற்பாடுகளை காரைக்கால் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையை சோ்ந்தோா் மற்றும் காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய கால்நடை தொழில்நுட்ப வல்லுநா் பா.கோபு, வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநா் ஆ.செந்தில் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com