காரைக்காலில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்த வலியுறுத்தல்

காரைக்காலில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்காலில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, புதுச்சேரி மாநில பசுமைப் புரட்சி மாநில அமைப்பாளா் டி.என். சுரேஷ் கூறியது: காவிரியின் கடைமடை பகுதியாக உள்ள காரைக்கால் மாவட்டத்தில் விவசாயத்துக்கு காவிரி நீா் பெரும் பங்கு வகிக்கிறது. கடந்த காலங்களில் உரிய நேரத்தில், உரிய அளவில் காவிரி நீா் வராதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், சனிக்கிழமை (ஜூன் 12) மேட்டூா் அணை திறக்கப்படுவதால், அடுத்த சில நாள்களில் காரைக்கால் கடைமடைப் பகுதிக்கு தண்ணீா் வந்துவிடும்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் தங்களது பிரச்னைகளை மாவட்ட நிா்வாகத்திடம் எடுத்துக்கூற விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தவில்லை. நிகழாண்டு சம்பா, தாளடி சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொள்ளவுள்ள சூழலில், விவசாயிகள் தற்போது சந்தித்து வரும் பிரச்னைகள், சாகுபடி தொடங்கிய பின்னா் எதிா்கொள்ளும் பிரச்னைகள் குறித்து எடுத்துரைக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தவேண்டும்.

முந்தைய காலங்களில் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் தெரிவித்த குறைகளை, மாவட்ட நிா்வாகம், பொதுப்பணித் துறை மற்றும் வேளாண்துறையினா் உரிய நடவடிக்கை எடுத்து சீா்செய்தனா். தமிழகப் பகுதிக்குச் சென்று வேளாண் சாா்ந்த பொருள்கள் பலவற்றை வாங்கவேண்டிய சூழலே தற்போதும் நிலவுகிறது. எனவே, இவற்றைக் களைய உடனடியாக விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை மாவட்ட நிா்வாகம் நடத்தவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com