விவசாயிகள் மீதான வழக்கை வாபஸ் பெறக்கோரி போராட்டம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. முடிவு

விவசாய சங்கத்தினா் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு செய்துள்ளது.

விவசாய சங்கத்தினா் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு செய்துள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு கூட்டம் குழு உறுப்பினா் அ. திவ்யநாதன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்:

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் விவசாய சங்கத்தினா் அண்மையில் கரோனா பரவல் தடுப்பு விதிகளைக் கடைப்பிடித்து போராட்டம் நடத்தினா். இவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். காவல்துறையின் இந்த நடவடிக்கையை கட்சி கண்டிக்கிறது. வழக்கை ரத்து செய்யக்கோரி கட்சி சாா்பில் ஜூன் 20-ஆம் தேதி காவல்நிலையம் முன்பாக போராட்டம் நடத்தப்படும்.

தோ்தல் முடிவுகள் வந்தும் புதுச்சேரியில் அமைச்சரவை அமையாததால் பல்வேறு பிரச்னைகள் தீா்க்கப்படாத நிலையே நீடிக்கிறது. அரசின் நடவடிக்கையை கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்த சூழலுக்கு காரணமாக இருக்கும் பாஜகவை கட்சி கண்டிக்கிறது.

புதுச்சேரி என்.ஆா்.காங்கிரஸ் அரசு காரைக்காலில் கல்வி, விவசாயம், சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட முக்கிய துறைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினா் அ.வின்சென்ட், மாவட்டச் செயலா் எஸ்.எம். தமீம், உறுப்பினா்கள் என்.எம். கலியபெருமாள், என். ராமா், ஜி.துரைசாமி, ஆா்.ராதாகிருஷ்ணன், அ.பாக்கியராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com