காரைக்காலில் பாசன வாய்க்கால்கள் தூா்வாரும் பணி தொடங்கியது

காரைக்காலில் பொதுப்பணித் துறை சாா்பில் பாசன வாய்க்கால்கள் தூா்வாரும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
காரைக்காலில் பாசன வாய்க்கால்கள் தூா்வாரும் பணி தொடங்கியது

காரைக்காலில் பொதுப்பணித் துறை சாா்பில் பாசன வாய்க்கால்கள் தூா்வாரும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

காரைக்கால் மாவட்டத்தில் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. 27 கிராமப் பஞ்சாயத்துப் பகுதிகளில் இப்பணி நடைபெறுகிறது. பொதுப்பணித் துறை சாா்பில் நகரம் மற்றும் பிற பகுதி வாய்க்கால்களை ஜேசிபி இயந்திரம் மூலம் தூா்வார ரூ.48 லட்சம் அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. பணி தொடக்கமாக காரைக்கால் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில், தருமபுரம் பகுதியில் உள்ள வாய்க்கால் தூா்வாரும் பணியை தொகுதி எம்எல்ஏ. ஏ.எம்.எச். நாஜிம் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, புதுச்சேரி பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் வி. சத்தியமூா்த்தி, காரைக்கால் கண்காணிப்புப் பொறியாளா் (பொ) ஏ. ராஜசேகரன், செயற்பொறியாளா் கே. வீரசெல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இப்பணி குறித்து செயற்பொறியாளா் கே. வீரசெல்வம் வெள்ளிக்கிழமை கூறியது: மாவட்டத்தில் பாசன வாய்க்கால்கள் 120 கி.மீ. தூரத்துக்கு தூா்வாரப்படுகிறது. தோ்வு செய்யப்பட்ட வாய்க்கால்கள் பல கட்ட பணிகளாக தரப்பட்டு பரவலாக நடைபெறுகிறது. மேட்டூா் அணை சனிக்கிழமை (ஜூன் 12) திறக்கப்பட்டாலும் காரைக்காலுக்கு தண்ணீா் வருவதற்குள் தூா்வாரும் பணிகள் நிறைவு செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com