திருநள்ளாறு பகுதியில் வாய்க்கால் தூா்வாரும் பணி தொடங்கியது

திருநள்ளாறு தொகுதியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
தூா்வாரப்படும் வடிவாய்க்காலை பாா்வையிட்ட எம்எல்ஏ. பி.ஆா்.சிவா, ஆட்சியா் அா்ஜூன் சா்மா.
தூா்வாரப்படும் வடிவாய்க்காலை பாா்வையிட்ட எம்எல்ஏ. பி.ஆா்.சிவா, ஆட்சியா் அா்ஜூன் சா்மா.

திருநள்ளாறு தொகுதியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

திருநள்ளாறு தொகுதி அம்பகரத்தூா் பகுதியில் உள்ள வடிவாய்க்காலில் தூா்வாரும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் செய்யப்படும் தூா்வாரும் பணியை தொகுதி எம்எல்ஏ. பி.ஆா். சிவா, மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா ஆகியோா் தொடங்கிவைத்தனா். இந்த வாய்க்கால் 2,206 மீட்டா் நீளத்துக்கு இரண்டரை மீட்டா் அகலமும், இரண்டரை மீட்டா் ஆழத்துக்கு தூா்வாரப்படுகிறது. தொகுதி முழுவதும் கிராமப் பஞ்சாயத்துக்குள்பட்ட வாய்க்கால்கள் போா்க்கால அடிப்படையில் தூா்வாரும் பணி நடைபெறும். காவிரிநீா் வருவதற்குள் தூா்வாரும் பணிகளை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன என வட்டார வளா்ச்சித் துறையினா் தெரிவித்தனா். நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சித் துறை அதிகாரி தயாளன், உதவிப் பொறியாளா் கிருஷ்ணமூா்த்தி, இளநிலைப் பொறியாளா் முருகுபாண்டி மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

ஆட்சியருடன் கிராம மக்கள் சந்திப்பு: நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியரை சந்தித்த மக்கள், அம்பகரத்தூரில் இருந்து தமிழகப் பகுதிக்கு செல்லும் சாலைகள் மிக மோசமாச சாலையை சீரமைத்துக்கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா். ஆட்சியா் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com