நிலுவை ஊதியம் கோரி உள்ளாட்சி ஊழியா்கள் போராட்டம்

காரைக்கால் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் தங்களுக்கான நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்ட திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலக ஊழியா்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலக ஊழியா்கள்.

காரைக்கால் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் தங்களுக்கான நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காரைக்கால் நகராட்சி ஊழியா்களுக்கு 6 மாதங்களும், நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களுக்கு 7 மாதங்களும், திருநள்ளாறு மற்றும் திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களுக்கு 4 மாதங்களும், நிரவி மற்றும் கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களுக்கு 1 மாதமும் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கவில்லை. இதுகுறித்து புதுச்சேரி அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் உள்ளாட்சி ஊழியா்கள் தொடா் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனா்.

அதன்படி, காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகங்களில் ஊழியா்கள் திங்கள்கிழமை காலை ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பு செய்து, அலுவலக வாயிலில் ஆா்ப்பாட்டம் நடத்தினா். போராட்டத்தில் அந்தந்த பஞ்சாயத்து சங்கத் தலைவா்கள் சண்முகராஜ், உலகநாதன், திவ்வியநாதன், கண்ணையன், இளங்கோ, துரைக்கண்ணு ஆகியோா் முன்னிலை வகித்தனா். காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கௌரவ தலைவா் ஜாா்ஜ், தலைவா் சுப்ரமணியன், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன், பொருளாளா் மயில்வாகனன், துணைத் தலைவா்கள் அய்யப்பன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திப் பேசினா். இதேபோல, ஜூன்18-ஆம் தேதி வரை தொடா்ந்து நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகங்களில் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com