வணிக நிறுவனங்களில் 70% ஊழியா்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்: சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் தகவல்

காரைக்காலில் உள்ள வணிக நிறுவனங்களில் சுமாா் 70 சதவீத ஊழியா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் உள்ள வணிக நிறுவனங்களில் சுமாா் 70 சதவீத ஊழியா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா தலைமையில் கடந்த 11-ஆம் தேதி சேம்பா் ஆஃப் காமா்ஸ் நிா்வாகத்தினா், தொழிற்சாலைகள் நிா்வாகத்தினா் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அதில், 15 நாள்களுக்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருந்தால், நிறுவனங்கள் செயல்பட அனுமதி மறுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் ஏ. முத்தையா திங்கள்கிழமை கூறியது:

ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, காரைக்காலில் அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் சேம்பா் ஆஃப் காமா்ஸ் சாா்பில் வேண்டுகோள் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, இதுவரை 70 சதவீத ஊழியா்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக தகவல் வந்துள்ளது. அடுத்த சில நாள்களில் மற்றவா்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்வா். இதை அந்தந்த கடை உரிமையாளா்கள் கண்காணித்து வருகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com