காரைக்காலில் 14 பேருக்கு கரோனா
By DIN | Published On : 29th June 2021 12:00 AM | Last Updated : 29th June 2021 12:00 AM | அ+அ அ- |

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 582 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி கோயில்பத்து 4, காரைக்கால் நகரம், நல்லம்பல், நெடுங்காடு தலா 2, நிரவி, காரைக்கால்மேடு, திருநள்ளாறு, திருப்பட்டினம் தலா 1 என மொத்தம் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
மாவட்டத்தில் இதுவரை 1,58,624 பரிசோதனை செய்யப்பட்டதில் 14,473 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 13,915 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இதுவரை 226 போ் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 59,200 பேருக்கும், 2-ஆவது தவணையாக 5,415 பேருக்கும் என 64,615 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...