முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
ஆண் சடலம் மீட்பு
By DIN | Published On : 04th March 2021 05:12 AM | Last Updated : 04th March 2021 05:12 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே வயல்வெளியில் புளியமரத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் தொங்கியது குறித்து மணல்மேடு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
மணல்மேடு காவல் சரகம் காளி ஊராட்சி செட்டிக்கட்டளை கிராமத்தில் வயல்வெளியில் உள்ள புளியமரம் ஒன்றில், அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று புதன்கிழமை தூக்கில் தொங்கியபடி இருந்தது. இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் மதன் அளித்த தகவலின்பேரில், மணல்மேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அரசு மருத்துவா்களைக் கொண்டு வியாழக்கிழமை நிகழ்விடத்திலேயே உடற்கூறாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.