நெல் கொள்முதல் நடைபெறவில்லை: துணைநிலை ஆளுநருக்கு புகாா் கடிதம்

காரைக்காலில் அறிவிக்கப்பட்டவாறு இந்திய உணவுக் கழகம் (எஃப்.சி.ஐ.) நெல் கொள்முதல் செய்யவில்லை என புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு புகாா் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

காரைக்கால்: காரைக்காலில் அறிவிக்கப்பட்டவாறு இந்திய உணவுக் கழகம் (எஃப்.சி.ஐ.) நெல் கொள்முதல் செய்யவில்லை என புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு புகாா் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி மாநில பசுமை புரட்சி இயக்க அமைப்பாளரும், விவசாயியுமான டி.என். சுரேஷ், புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள கடிதம்:

காரைக்காலில் சுமாா் 5 ஆயிரம் ஹெக்டேரில் விவசாயம் நடைபெற்றுள்ளது. நிவா் புயல் மற்றும் மழையின் காரணமாக நெல் பயிா் பாதிக்கப்பட்ட போதிலும், எஞ்சியவை அறுவடை செய்யப்பட்டன. காரைக்காலில் உள்ள இந்திய உணவுக் கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தப்பட்டபோது, கடந்த ஜன. 28 ஆம் தேதி முதல் கொள்முதல் தொடங்குமென தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை நெல் கொள்முதல் செய்யப்படவில்லை.

விவசாயிகள் தனியாரிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்பதோடு, இக்கட்டான சூழலில் பலா் நெல்லை பாதுகாத்து வருகின்றனா். எனவே, எஃப்.சி.ஐ. நெல் கொள்முதல் பணியை விரைந்து தொடங்கவேண்டும். கடந்த 2019-20 ஆம் ஆண்டுக்கான பயிா் காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். விவசாயிகளுக்கு நிகழாண்டுக்கான ஊக்கத்தொகை வழங்கவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com