மாா்ச் 6 இல் நளநாராயணப் பெருமாள் கோயில் பிரம்மோத்ஸம் தொடக்கம்

திருநள்ளாறு ஸ்ரீ நளநாராயணப் பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவம் வரும் 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

காரைக்கால்: திருநள்ளாறு ஸ்ரீ நளநாராயணப் பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவம் வரும் 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலைச் சாா்ந்தது ஸ்ரீ நளபுரநாயகி சமேத ஸ்ரீ நளநாராயணப் பெருமாள் கோயில். பழைமையான இக்கோயிலில் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயா் அருள்பாலிக்கிறாா். இக்கோயிலில் வருடாந்திர பிரம்மோத்ஸவம் மாசி மாதத்தில் கொடியேற்றத்துடன் நடைபெற்று வருகிறது.

நிகழாண்டு, இந்த உத்ஸவம் வரும் 6 ஆம் தேதி காலை 10.30 முதல் 12 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மாலையில் சூரிய பிரபையில் வேணுகோபாலராக பெருமாள் வீதியுலா நடைபெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை ஹம்ச வாகனத்திலும், திங்கள்கிழமை சேஷ வாகனத்திலும், செவ்வாய்க்கிழமை கருடசேவையும் நடைபெறுகிறது.

உத்ஸவ நிறைவு நாளான புதன்கிழமை காலை நள தீா்த்தக் குளத்துக்கு பெருமாள் எழுந்தருளி தீா்த்தவாரியும், தொடா்ந்து, தேரில் வீதியுலாவும் நடைபெறுகிறது. பிற்பகல் 3 மணிக்கு திருக்கல்யாணம், மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com