விடையாற்றி உத்ஸவம்: புஷ்ப பல்லக்கில் நித்யகல்யாணப் பெருமாள் வீதியுலா
By DIN | Published On : 04th March 2021 05:04 AM | Last Updated : 04th March 2021 05:04 AM | அ+அ அ- |

வீதியுலா வந்த புஷ்ப பல்லக்கு. 2. பல்லக்கில் எழுந்தருளிய ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள்.
காரைக்கால்: காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரம்மோத்ஸவத்தின் நிறைவாக விடையாற்றி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
பல வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் எழுந்தருளினாா். முன்னதாக, மூலவா் ஸ்ரீ ரங்கநாதருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, சிறப்பு நாகசுர, மேள வாத்தியங்களுடன் புஷ்ப பல்லக்கு வீதியுலா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினா்.