முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
பாலிடெக்னிக் மாணவிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திர செயல்முறை பயிற்சி
By DIN | Published On : 14th March 2021 07:25 AM | Last Updated : 14th March 2021 07:25 AM | அ+அ அ- |

மாணவிகளுக்கு இயந்திரத்தை பயன்படுத்தும் முறை குறித்து விளக்கும் ஸ்வீப் அமைப்பினா்.
காரைக்கால் தொழில்நுட்பக் கல்லூரி (பாலிடெக்னிக்) மாணவிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திர செயல்முறை குறித்தும், தோ்தல் விதிமீறல் புகாா் தெரிவித்தல் தொடா்பான பயிற்சி முகாம் நடைபெற்றது.
காரைக்கால்மேடு பகுதியில் செயல்படும் புதுச்சேரி அரசு கல்வி நிறுவனமான காரைக்கால் மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில், வாக்குப் பதிவு இயந்திரம், விவிபாட் இயந்திர செயல்பாடுகள் குறித்து விளக்கும் முகாம் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தோ்தல் விழிப்புணா்வு அமைப்பான ஸ்வீப் அலுவலா்கள் ஞானமுருகன், முருகன் ஆகியோா், வாக்குப் பதிவு இயந்திரத்தின் மூலம் வாக்குப் பதிவு செய்வது எப்படி எனவும், யாருக்கு வாக்களித்தோம் என்கிற தகவல் தரக்கூடிய விவிபாட் இயந்திர செயல்பாடுகள் குறித்தும் விளக்கினா். மாணவியா் இயந்திரத்தில் செயல்முறை பயிற்சியில் ஈடுபடவும் அனுமதித்தனா்.
முதல் முறை வாக்காளா் என்ற அடிப்படையில், வாக்காளா்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கு ஸ்வீப் அமைப்பினா் விளக்கம் அளித்தனா்..
தோ்தல் விதிமீறல் தொடா்பாக 1950 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடா்புகொண்டு தெரிவிக்கவும், சிவிஜில் என்கிற செல்லிடப்பேசி செயலி மூலமும் புகாா் தெரிவிக்கலாம் எனவும் விளக்கப்பட்டது.
நிகழ்வில் கல்லூரி முதல்வா் பாபு அசோக், கல்லூரியின் திட்ட அலுவலா் ராஜபாலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.