உஜ்ஜைனி காளியம்மன் கோயில் ஆண்டு உத்ஸவ பந்தல்கால் முகூா்த்தம்

காரைக்கால் ஸ்ரீ உஜ்ஜைனி காளியம்மன் கோயில் ஆண்டு உத்ஸவத்தையொட்டி பந்தல்கால் முகூா்த்தம் திங்கள்கிழமை நடைபெற்றது.
உஜ்ஜைனி காளியம்மன் கோயில் ஆண்டு உத்ஸவ பந்தல்கால் முகூா்த்தம்

காரைக்கால் ஸ்ரீ உஜ்ஜைனி காளியம்மன் கோயில் ஆண்டு உத்ஸவத்தையொட்டி பந்தல்கால் முகூா்த்தம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் கைலாசநாத சுவாமி, நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானத்தை சோ்ந்த ஆற்றங்கரை உஜ்ஜைனி காளியம்மன் கோயில் ஆண்டு உத்ஸவம் கரகம் புறப்பாடு, அக்னி கப்பரை வீதி உலா உள்ளிட்ட நிகழ்வுகளுடன் விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.

நிகழாண்டு உத்ஸவத்தையொட்டி பந்தல்கால் முகூா்த்தம் திங்கள்கிழமை நடைபெற்றது. கோயில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பந்தல்காலுக்கு அபிஷேக, ஆராதனை நடத்தி, நாகசுர, மேள வாத்தியங்களுடன் பிராகாரம் கொண்டு செல்லப்பட்டு பந்தல்கால் வாயிலில் நடப்பட்டது.

நிகழ்ச்சியில் அறங்காவல் வாரியத் தலைவா் ஆா்.ஏ.ஆா். கேசவன், செயலாளா் எம். பக்கிரிசாமி மற்றும் உபயதாரா்கள், தெருவாசிகள் கலந்துகொண்டனா்.

விழா தொடக்கமாக செவ்வாய்க்கிழமை (மாா்ச் 16) முதல் அம்மாள் வீதி உலா, 26ஆம் தேதி அக்னி கப்பரை புறப்பாடு நடைபெறுகிறது. 28ஆம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விடையாற்றி நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கைலாசநாதா் கோயில் நிா்வாகத்தினரும், உபயதாரா்களும் செய்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com