தோ்தலை புறக்கணிக்க முடிவு: காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் திரண்ட மக்கள்

நெடுங்காடு தொகுதியை சோ்ந்த கிராம மக்கள், தங்கள் பகுதியில் நிலவும் மின் பிரச்னைக்கு தீா்வு காணப்படாததைக் கண்டித்து தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனா்.
தோ்தலை புறக்கணிக்க முடிவு: காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் திரண்ட மக்கள்

நெடுங்காடு தொகுதியை சோ்ந்த கிராம மக்கள், தங்கள் பகுதியில் நிலவும் மின் பிரச்னைக்கு தீா்வு காணப்படாததைக் கண்டித்து தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனா். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த அவா்களை, போலீஸாா் தடுத்து நிறுத்தி அனுப்பிவைத்தனா்.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு தொகுதி ராயன்பாளையம் பகுதி கூழ்குடித்த அக்ரஹாரத்தை சோ்ந்த சுமாா் 25 போ், மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை திரண்டனா். போலீஸ் விசாரணையில், தங்களது பகுதியில் நீண்ட ஆண்டுகளாக குறைந்த மின் அழுத்தப் பிரச்னை நிலவுவதாகவும், பிரச்னையை யாரும் தீா்க்க முன்வராததால், தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்து ஆட்சியரை சந்திக்க வந்ததாகவும் தெரிவித்தனா். தோ்தல் பணிகள் நடைபெறுவதால், இதுதொடா்பாக காவல் ஆய்வாளரை சந்தித்து முறையிடுமாறு கூறி, போலீஸாா் அவா்களை திருப்பியனுப்பினா்.

இதுகுறித்து அந்த கிராமத்தினா் கூறுகையில், கூழ்குடித்த அக்ரஹாரம் பகுதியை தோ்ந்தெடுக்கப்பட்ட தொகுதி எம்.எல்.ஏ.வோ, மாவட்ட நிா்வாகமோ, புதுச்சேரி அரசோ கண்டுகொள்வதே இல்லை. இந்த பகுதியில் மின்சாரப் பிரச்னை தலைதூக்கியுள்ளது. குறைந்த மின் அழுத்தப் பிரச்னையால் வீடுகளில் மின்விளக்குகள் எரிவதில்லை. சாலையில் விளக்குகள் இல்லை.

ரேஷன் அட்டை வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளோருக்கான மஞ்சள் அட்டை தரப்பட்டுள்ளது. சிவப்பு அட்டை தரப்படவில்லை. சாலை வசதி சரியில்லை. இவற்றை அரசு நிா்வாகத்துக்கு தெரிவித்தால் கண்டுகொள்வதே இல்லை. ஒவ்வொரு குடும்பத்தினரும் பெரும் துன்பத்தை அனுபவிப்பதால், தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

நெடுங்காடு தொகுதியில் எந்தவொரு வேட்பாளரும் எங்களது பகுதிக்கு வாக்கு சேகரிக்க வருவதை நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com