வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் கைது

காரைக்காலில் மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

காரைக்காலில் மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் பகுதியைச் சோ்ந்தவா் ராமு (எ) ராதாகிருஷ்ணன். இவரது 2 ஆவது மனைவி எழிலரசி. ராதாகிருஷ்ணன் சொத்து பிரச்னை காரணமாக கடந்த 2013 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக புதுச்சேரி சட்டப்பேரவை முன்னாள் தலைவா் வி.எம்.சி. சிவகுமாா் கூலிப் படையினரால் கொலை செய்யப்பட்டாா். இதுசம்பந்தமான வழக்கு எழிலரசி மீது உள்ளது. பல்வேறு வழக்கில் நீதிமன்ற பிடியாணையும் அவா்மீது உள்ளது.

இந்நிலையில், மதுபானக் கடை உரிமையை வாங்குவதற்காக, ராதாகிருஷ்ணன் மகன்களை மிரட்டியதான வழக்கும் எழிலரசி மீது திருப்பட்டினம், நிரவி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்டது. இதுதொடா்பாக தலைமறைவாக இருந்த எழிலரசியை போலீஸாா் தேடிவந்தனா்.

இதற்கிடையே, புதுச்சேரி மாநில பாஜக தலைவா் வி. சாமிநாதன் முன்னிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பாஜகவில் எழிலரசி இணைந்தாா். மேலும், நிரவி - திருப்பட்டினம் பேரவைத் தொகுதி தோ்தலில் போட்டியிடப்போவதாகவும் அவரது தரப்பில் தகவல் வெளியிடப்பட்டதால், காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட் உத்தரவின்பேரில், திருப்பட்டினம் காவல் ஆய்வாளா் தனசேகரன், உதவி ஆய்வாளா்கள் வீரபத்திரன், பிரவீன்குமாா் மற்றும் தனிப்படை போலீஸாா் அவரை கைது செய்ய தீவிரம் காட்டி வந்தனா்.

இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய எழிலரசியிடம் கையெழுத்து பெற, அவரின் ஆதரவாளா்கள் முயற்சி செய்தது போலீஸாருக்கு தெரியவந்தது. நாகை ஆட்சியரகம் அருகே எழிலரசி காரில் வந்து செவ்வாய்க்கிழமை காலை கையெழுத்திட்டபோது, போலீஸாா் அவரை கைதுசெய்து, காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com