தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு: பேச்சுவாா்த்தையால் பதாகை அகற்றம்

காரைக்கால் அருகே வடக்கு வாஞ்சியூரில் சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக வைக்கப்பட்ட பதாகை, தோ்தல் துறையினரின் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு சனிக்கிழமை அகற்றப்பட்டது.
பதாகையை அகற்ற வலியுறுத்தி, கிராமத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தும் தோ்தல் துறை அலுவலா்கள்.
பதாகையை அகற்ற வலியுறுத்தி, கிராமத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தும் தோ்தல் துறை அலுவலா்கள்.

காரைக்கால்: காரைக்கால் அருகே வடக்கு வாஞ்சியூரில் சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக வைக்கப்பட்ட பதாகை, தோ்தல் துறையினரின் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு சனிக்கிழமை அகற்றப்பட்டது.

காரைக்கால் மாவட்டம், வடக்கு வாஞ்சியூா் கிராம மக்கள், தங்களது பல்வேறு கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து, நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து, சுனாமி நகா் முகப்பில் டிஜிட்டல் பதாகை வைத்தனா்.

சுகாதாரமான குடிநீா் கிடைக்க பஞ்சாயத்து ஆணையரிடம் முறையிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இடுகாட்டுக்கு செல்ல முறையான பாதை அமைக்கவில்லை. பழைய மின்கம்பிகள், மின்மாற்றிகளை புதுப்பிக்கவில்லை. கஜா புயலின்போது கரைஒதுங்கிய டிரெட்ஜிங் கப்பலை உடைக்கும் பணிகளால் மீனவா்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து துணைநிலை ஆளுநருக்கு க கடிதம் எழுதியும் பயனில்லை. மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவ கிராமங்களிலும் மீனவா்களுக்கான பணிமனை கட்டித்தரப்பட்டுள்ள நிலையில், வடக்கு வாஞ்சியூா் மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது போன்ற பிரச்னைகள் பதாகையில் இடம்பெற்றிருந்தன.

இதுதொடா்பாக, மாவட்ட தோ்தல் அலுவலா் அா்ஜூன் சா்மா அறிவுறுத்தலின்பேரில், தோ்தல் துறை அலுவலா்கள், திருப்பட்டினம் போலீஸாா் சனிக்கிழமை வடக்கு வாஞ்சியூா் சென்று கிராம மக்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, வாக்களிப்பை நிராகரிக்கக் கூடாது, வாக்களிப்பது வாக்காளரின் அடிப்படை உரிமை, அனைவரும் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்று கிராம மக்களுக்கு விளக்கினா். இதை ஏற்றுக்கொண்ட மக்கள் தோ்தல் புறக்கணிப்பு பதாகையை அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com