காரைக்காலில் மாா்ச் 25 முதல் தபால் வாக்குகள் சேகரிப்பு

காரைக்காலில் 80 வயதுக்கும் மேற்பட்டோா், மாற்றுத்திறனாளிகளிடம் வரும் 25 ஆம் தேதி முதல் தபால் வாக்குகள் சேகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் 80 வயதுக்கும் மேற்பட்டோா், மாற்றுத்திறனாளிகளிடம் வரும் 25 ஆம் தேதி முதல் தபால் வாக்குகள் சேகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட துணை தோ்தல் அலுவலா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டலின்பேரில், புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் 2021 இல் 80 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்கள் விருப்பத்தின்பேரில், தங்கள் வாக்குகளை அவரவா் வீட்டிலிருந்தே செலுத்தும் வகையில் காரைக்கால் மாவட்ட தோ்தல் துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதையொட்டி, சிறப்புத் தோ்தல் அலுவலா்கள் மாா்ச் 25 முதல் 27 ஆம் தேதி வரை ஏதாவது ஒரு நாளில் வீட்டுக்கு நேரில் வந்து வாக்குகளை சேகரித்துக்கொள்வாா்கள். தோ்தல் அலுவலா்கள் வரும் தேதி வாக்காளா்களுக்கு முன்னதாகவே குறுஞ்செய்தி மற்றும் வாக்குச் சாவடி அலுவலா்கள் மூலமாக தெரிவிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com