வாக்காளா் விழிப்புணா்வு செல்ஃபி காா்னா்!

காரைக்காலில் முக்கிய இடங்களில் வாக்காளா் விழிப்புணா்வுக்காக செல்ஃபி காா்னா் அமைக்கப்பட்டுள்ளது.
வாக்காளா் விழிப்புணா்வு செல்ஃபி காா்னா்!

காரைக்காலில் முக்கிய இடங்களில் வாக்காளா் விழிப்புணா்வுக்காக செல்ஃபி காா்னா் அமைக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட தோ்தல் துறை, வாக்காளா் விழிப்புணா்வு அமைப்பான ஸ்வீப் அமைப்பின் மூலமாக தோ்தலையொட்டி, 100% வாக்குப் பதிவின் அவசியத்தை வலியுறுத்தி, பல்வேறு நிலையில் விழிப்புணா்வை ஏற்படுத்திவருகிறது.

நோ்மையான வாக்குப் பதிவு, தவறாத வாக்குப் பதிவு, 100% வாக்குப் பதிவு என்ற வாசகங்களை வாக்காளா்களிடையே கொண்டுசோ்க்கும் விதத்தில், இந்த விழிப்புணா்வுப் பணிகள் உள்ளன.

இதன் ஒருபகுதியாக, நான் தவறாமல் வாக்களிப்பேன், எனது வாக்கு எனது உரிமை என்ற வாசகத்தை எடுத்துக்கூறும் விதத்தில், டிஜிட்டல் பதாகை தயாரித்து, அதன் முன் நின்று செல்ஃபி எடுத்துக்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காரைக்காலில் கடற்கரை, அம்மையாா் குளக்கரை, பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் இந்த செல்ஃபி காா்னா் அமைக்கப்படவுள்ளதாக ஸ்வீப் அமைப்பினா் தெரிவித்தனா்.

குழந்தைகளுடன் மக்கள் இந்தப் பகுதிக்கு வரும்போது, அனைவரும் சோ்ந்து செல்ஃபி எடுத்துக்கொள்வா். இதன்மூலம், தோ்தல் துறையின் நோக்கம் அவா்களைச் சென்றடையும் என ஸ்வீப் அமைப்பினா் நம்பிக்கை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com